விஜய் மகன் சஞ்சயிடம் கதை கேட்டிருக்கிறேன்...ஓப்பனாக சொன்ன நடிகர் கவின்!
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கவின் உள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நடிகர் கவின்
சின்னத்திரை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நடிகர் கவின் தற்போது ’லிஃப்ட்’, ‘டாடா’ என அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இயக்குநர் எலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் ஸ்டார் பட டீசர் வெளியானது. அதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது அப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .அந்த வகையில் இப்படம் குறித்து செய்தியர்களிடம் நடிகர் கவின் பேட்டியளித்த வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதாக எழுந்த பேச்சு உண்மைதானா என்ற கேள்வி அவரிடம் கேட்ப்பட்டது.
விஜய் மகன் படம்
அதற்கு, “விஜய் மகன் என்னிடம் பேசியது உண்மைதான். ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை சொன்னார். மிகவும் எளிமையாக நட்பு ரீதியிலான சந்திப்பு அது. அந்த சமயத்தில் நான் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்க கமிட் ஆகியிருந்தேன்.அதைப்பற்றியும் அவரிடம் சொன்னேன். பின்பு, கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வருவதாக சொன்னார்.
அதன் பின்பு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியாகிய நிலையில், படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் குழுவினர் போன்ற எவ்வித விவரங்களும் வெளி வரவில்லை.