அந்த நடிகை மீது அவ்வளவு க்ரஷ்; அப்படி சைட் அடிப்பேன் - நடிகர் கார்த்தி பளீச்!
நடிகர் கார்த்தி அவரது க்ரஷ் குறித்து பகிர்ந்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி
தமிழில் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடையே வெற்றியை தேடி தந்ததோடு, தேசிய விருதையும் வென்றது.

இதையடுத்து கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களில் நடித்தார்.
க்ரஷ்
இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார், ஜப்பான் படங்களில் நடித்தார். தற்போது கைதி 2, சர்தார் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னதாக கார்த்தி அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “நடிகை அமலா மீது எனக்கு சிறு வயதிலிருந்தே மிகப்பெரிய க்ரஷ் உண்டு. இப்போவரைக்கும் அது இருக்கிறது. அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் அடையாறு அருகே ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தார்.
எப்போதும் அவரது ஹோட்டலில் பார்சல் வாங்குவதற்கு எங்கள் வீட்டு டிரைவரை அனுப்புவோம். ஆனால் இரவு நேரத்தில் அமலா அங்கு இருப்பார். அதனால் டிரைவருடன் நானும் சென்று பயங்கரமாக அமலாவை சைட் அடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil