காதலியை கரம் பிடித்தார் நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தமிழ்நாட்டு ஜாமீன் வீட்டு பெண்ணாம்
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம்
பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், 7வயது முதலே பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம், இந்தியன்2, ராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
பிரபல மாடலான தாரிணி காலிங்கராயர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(08.12.2024) கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் எளிமையாக நடைபெற்றது. நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, அமைச்சர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஊத்துக்குளி ஜமீன்
திருமணம் எளிமையாக நடந்தாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
தாரிணி காலிங்கராயர், ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளதோடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா முதல் ரன்னர் அப் போன்ற பட்டங்களையும் வென்றுள்ளார். இவர் ஊத்துக்குளி ஜமீன் குடும்பத்தின் வாரிசு ஆவார்.