நான் அடிச்சிர்வேன்னு பயந்தாரு - சிம்பு குறித்து ஜாபர் சாதிக் ஓபண்டாக்!
வெந்து தனிந்தது காடு குறித்த அனுபவத்தை நடிகர் ஜாஃபர் சாதிக் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஜாபர் சாதிக்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜாபர் சாதிக் அந்த வில்லன் கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அதற்கு முன்னதாக பாவக்கதைகள் எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.
வெந்து தணிந்தது காடு
இந்நிலையில், கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு அண்மையில் வெளியானது. இதில் தான் நடித்துள்ள அனுபவம் மற்றும் நடிகர் சிம்பு குறித்து சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், சிம்பு சாருடன் நடிப்பது மிகவும் ஜாலியாகவே இருந்தது. சண்டைக் காட்சிகளில் அவர் என்னை அடித்து விடுவாரோ, நான் அவரை அடித்து விடுவேனோ என்று இருவரும் பயந்தோம். 11 வரிடங்களுக்கு முன்னதாகவே சிம்புவை சந்தித்துள்ளேன்.
கேர்ள் ஃபிரெண்ட் சப்போர்ட்
கெளதம் வாசுதேவ மேனன் சார் ஹீரோ மாதிரி இருப்பார். செட்டில் கோபமே படாமல் எப்போதும் கூலாகவே இருப்பார். என் மீது பெரிய நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்தார். தொடர்ந்து என்னை குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை நான் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை.
மரியாதை இல்லாத இடத்தில் நானும் மரியாதையா நடந்துக் கொள்ள மாட்டேன். யார் வேனா படத்த ரிவ்யூ பண்ணலாம். ஆனா தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசுவது கஷ்டமா இருக்கும்.
என் கேர்ள் ஃபிரெண்ட் எனக்கு எப்போதும் சப்போர்ட். எந்த நிலையிலும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. வெந்து தணிந்தது காடு-2 படத்திற்காக எதிர்பார்ப்பில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.