விரைவில் கல்யாணம்... காதலியை அறிமுகம் செய்த ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan Marriage Viral Photos
By Sumathi Oct 05, 2022 01:55 PM GMT
Report

திருமணம் செய்து கொள்ள மணப்பெண் புகைப்படத்தை ஹரிஷ் கல்யாண் இன்று வெளியிட்டுள்ளார்.

ஹரிஷ் கல்யாண்

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். 'பியர் பிரேமா காதல்' ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ஓ மனப் பெண்ணே’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை தக்க வைத்தார்.

விரைவில் கல்யாணம்... காதலியை அறிமுகம் செய்த ஹரிஷ் கல்யாண்! | Actor Harish Kalyan Announced His Marriage

இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமணம் செய்ய உள்ள மணப்பெண்ணின் கரத்தை மட்டும் வெளியிட்டிருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நர்மதா உதயகுமாரின் புகைப்படத்தை வெளியிட்டு தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

திருமணம்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிரஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள்.

அதுபோலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள், ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்" என்று கூறியுள்ளார்.

வைரல் ஃபோட்டோ

மேலும்," இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்க உள்ள முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், அன்பான ரசிகர்கள், ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன்,

நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.