மாணவி மர்ம மரணம்... கரம் கோர்ப்போம் நீதிக்கு - குரலெழுப்பிய ஹரிஷ் கல்யாண்!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்திற்கு எதிராக, நீதிக்கு ஆதரவு கேட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட் செய்துள்ளார்.
மாணவி இறந்த விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக,
அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
ஹரிஷ் கல்யான்
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#JusticeForSrimathi #Kallakuruchi
— Harish Kalyan (@iamharishkalyan) July 17, 2022
I hope whoever is responsible for her death is held accountable.
கரம் கோர்ப்போம் நீதிக்கு.
மேலும் இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் நியாயம் கேட்டு வருகின்றனர். ட்விட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் பகிரப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நடிகர் ஹரிஷ் கல்யான் தனது ட்விட்டர் பக்கத்தில்,
இச்சம்பவத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். அதில், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும், கரம் கோர்ப்போம் நீதிக்கு என்றும் கூறியுள்ளார்.