டும்..டும்.. கல்யாணத்தை கன்ஃபார்ம் செய்த ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan Only Kollywood Marriage Viral Photos
By Sumathi Oct 05, 2022 10:06 AM GMT
Report

ஹரிஷ் கல்யாண் தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண்

தமிழில் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் 2010ல் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’,

டும்..டும்.. கல்யாணத்தை கன்ஃபார்ம் செய்த ஹரிஷ் கல்யாண்! | Actor Harish Kalyan Announced His Marriage

‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது.

விரைவில் திருமணம்

ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரீஷ். வருங்கால மனைவியின் கையைப் பிடித்திருக்கும் படத்தைப் பதிவிட்டு, ’புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மணப்பெண் யார்? எப்போது திருமணம் என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.