என் அந்த முடிவால் 5 உயிரு போச்சு; இப்போ வாடகை வீடுதான் - கலங்கிய கஞ்சா கருப்பு!
கஞ்சா கருப்பு தனது வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கஞ்சா கருப்பு
மதுரையைச் சேர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன்,
அழகிய தமிழ்மகன், திருப்பதி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன்பின், ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை தானே தயாரித்திருந்தார்.
பெருத்த நஷ்டம்
அதன் மூலம் பெருத்த நஷ்டம் அடைந்தார். அந்தப் படத்தால் சம்பாத்தித்த அனைத்தையும் இழந்தார். சமீபத்தில், ஓங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், கண்ட கண்டவர்கள் எல்லாம் சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இந்த கஞ்சா கருப்பு சுத்த கூடாதா?
சென்னையில் தான் என்னுடைய பழைய வீடான ‘பாலா – அமீர்’ இல்லத்தை கொடுத்து விட்டேன். இப்போ மாதம் 30,000 ரூபாயில் வாடகை வீட்டில் இருக்கிறேன். சொந்த வீடு போனாலும் வாடகை வீட்டில் சந்தோஷமாகத்தான் நான் இருக்கிறேன். தற்போது நான் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறேன்.
அதோடு படம் எடுக்க நினைத்து தப்பான முடிவில் ஐந்து பேருடைய உயிர் போய் இருக்கு. இது யாருக்குமே வெளியில் தெரியாது. என்னுடைய லெட்டர் பேடில், வவுச்சரில் கையெழுத்து போட்டது தான் நான் செய்த தப்பு. ஐந்து பேரை இழந்துவிட்டேன். என்னுடைய அக்கா மகன், எங்கள் ஐயா, பாட்டி, மாமா என ஐந்து பேர் இறந்து விட்டார்கள். நான் செய்த மிகப்பெரிய தவறால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.