சிவகார்த்திகேயன் சர்ச்சை.. அருகதையே இல்ல, மூடிகிட்டு இருக்கணும் - ஆங்கர் தீபக் பளீச்!
ஆங்கர் தீபக் சிவகார்த்திகேயன் சர்ச்சை குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.
சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். இது குறித்து வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறினார்.
தீபக் பேட்டி
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆங்கர் மற்றும் நடிகர் தீபக் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இப்பொழுதெல்லாம் சோசியல் மீடியாவில் வேகமாக பொய்களை பரப்பி வருகிறார்கள். வியூஸ்க்காக ஒரு விஷயத்தை பெருசு பிண்றாங்க ஆனால், உள்ளே பார்த்தால் குப்பையான ஒரு நியூஸ் தான் இருக்கும்.
ஒருத்தன் அதை வைச்சா தொடர்ந்து அதை 10 பெரு போடுறாங்க. ஒரு விஷயத்தை பற்றி தெரியவில்லை என்றால் அதை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. ஒருத்தரை பற்றி தெரியலையா வாயை மூடிகிட்டு இருக்கனும்" என்று கூறியுள்ளார்.