நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!!

Karnataka Murder
By Karthick Jun 11, 2024 06:55 AM GMT
Report

பெங்களூரு நகர போலீஸார் இன்று பிரபல கன்னட நடிகர் தர்ஷனை கைது செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தர்ஷன் 

கன்னட நடிகரான தர்ஷன் கன்னட ரசிகர்களால் challenging star என அழைக்கப்படுகிறார். மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அவர் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறார்.

Actor darshan thogudeepa

நடிகை நிகிதாவுடன் ரகசிய உறவில் இருந்தது வெட்டவெளிச்சமாகவே வெளிவந்தது. அவரை இன்று காலை அவரின் பண்ணை வீட்டில் வைத்து கைது செய்துள்ளது பெங்களூரு காவல் துறை. இதற்கு பின்னணியில் கொலை வழக்கு ஒன்று உள்ளது.

போக்கிரி நடிகருடன் தகாத உறவு...வசமாக மாட்டி ரெட் கார்டு வாங்கிய பிரபல தமிழ் நடிகை!!

போக்கிரி நடிகருடன் தகாத உறவு...வசமாக மாட்டி ரெட் கார்டு வாங்கிய பிரபல தமிழ் நடிகை!!

கொலை 

அண்மையில், கர்நாடக மாநில சித்ராதுர்கா பகுதியில் ரேணுகா தேவி என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார். ஜூன் 9ஆம் தேதி பிணமாக கண்டெக்கப்பட்டார் ரேணுகா தேவி.

Renuka devi murder case

முதலில் ரேணுகா தேவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், விசாரணையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சமூக வலைதளத்தில் நடிகையான பவித்ரா கவுடா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததன் காரணமாக ரேணுகா தேவி கொலை செய்யப்பட்டார் என தகவல் வெளிவருகின்றன.

Darshan Pavithra Gowda

பவித்ரா  கவுடா தர்ஷனின் நெருங்கிய தோழி என்றும், இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 9பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10-வது நபராக தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னதாக, தர்ஷனுக்கும் பவித்ரா கவுடாவுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் வந்தன, அவரையும் போலீசார் விசாரிக்கின்றனர்.