69வது வயதில் கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி - எதற்கு தெரியுமா?
மெகாஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி. தனது 45 வருட திரையுலக வாழ்வில் 156 படங்களில், 537 பாடல்களுக்கு, 24,000 நடன அசைவுகள் செய்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் நடன அசைவுகள் அவர் நடிக்க தொடங்கிய காலகட்டத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கடந்த 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானதில் தொடங்கி
ருத்ரா வீணா, தாகூர், சுவயம் குருஷீ, ஸ்டாலின், கேங் லீடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசு சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
கின்னஸ்
இந்த நிலையில்,உலக சாதனை படைத்தது குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், "நான் கின்னஸ் உலக சாதனை படைப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இத்தனை வருட திரை வாழ்வில் நடனம் எனது வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது," என்று தெரிவித்தார்.
Congratulations to my Mamaya Megastar Chiranjeevi Garu for achieving the Guinness World Record as the Most Prolific Film Star in Indian Cinema, with 156 films and 24,000+ dance moves across 537 songs in 45 years! ? #ChiranjeeviGuinnessRecord #MegastarChiranjeevi@KChiruTweets… pic.twitter.com/MhOZg75aAY
— Upasana Konidela (@upasanakonidela) September 22, 2024
நடிகர் சிரஞ்சீவி உலக சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்து தெலுங்கு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்," எனக் கூறியுள்ளார்.
சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.