எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் - விஜய் குறித்து நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை பதிவு!
விஜய்யின் தவெக அரசியல் மாநாடு குறித்து நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தவெக மாநாடு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் மாநாடு அரங்கு அமைக்கப்பட்டு நடிகர் விஜயின் தவெக முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய விஜய் மதச்சார்பற்ற சமூக நீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை முன்னிறுத்தி த.வெ.க தலைவர் விஜய் பேசியிருந்தார்.
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
— Bose Venkat (@DirectorBose) October 27, 2024
அதோடு மட்டுமல்லாமல், இந்த கூட்டத்தில் பேசிய விஜய், பிரித்தாலும் பிளவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார். விஜயின் மாநாடு பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே சமயத்தில், அதிக விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது.
சர்ச்சை
அந்த வகையில், விஜய்யின் பேச்சை, திமுக ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் கிண்டல் செய்துள்ளார். அவரது தனது எக்ஸ் தள பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி. வியப்பு. எழுதிக்கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு.. பார்ப்போம்” எனக் கூறினார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை கங்குவா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய வெங்கட், சூர்யா போன்ற ரசிகர்களைப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அவ்வளவுதான் ஆனால், ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று கூறியதற்கு விஜய்யைப் பற்றித் தான் பேசியிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.