அந்த ஹீரோ மாசம் ரூ.15000 அனுப்புறாரு; நான் கேட்டது கூட இல்ல - பாவா லட்சுமணன்!
நடிகர் ஜீவா தனக்கு செய்யும் உதவி குறித்து நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.
பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் பாவா லட்சுமணன். இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் கலக்கியிருப்பார். கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து பாவா லட்சுமணன் நடித்த காட்சிகள் இன்றளவும் மக்களை சிரிக்க வைக்கிறது.
இதனிடையே சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட அவருக்கு காலில் வந்த புண் காரணமாக ஒரு விரலை நீக்கியிருந்தனர். மேலும், அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தற்போது குறைந்துள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பாவா லட்சுமணன், நடிகர் ஜீவா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது ஜீவா ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார்.
நடிகர் ஜீவா
சின்ன பையனாக இருக்கும் போதே நான் அவரை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்து நான் அவர்களுடைய குடும்ப நிறுவனத்தில் வேலை பார்த்ததால், என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு.
எனக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா மாதம் ரூ. 15,000 அனுப்பத் தொடங்கினார். இப்போது வரைக்கும் அனுப்புகிறார். நான் கேட்டது கூட கிடையாது. ஆனால், அவராகவே அனுப்பி விடுவார்.
நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, ஆர்.பி சவுத்ரி சார் தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.