கல்யாணமா..? அந்த ஆசையே போச்சு; இதுதான் காரணமே - மனம் திறந்த பாவா லட்சுமணன்!
ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து நடிகர் பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.
பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் பாவா லட்சுமணன். இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் கலக்கியிருப்பார். கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து பாவா லட்சுமணன் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
இந்நிலையில் பாவா லட்சுமணன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "எனக்கு ஆரம்பத்துல சினிமாக்காரன்னு பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. எங்கம்மா, எங்கப்பா, எங்கக்கா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க.
ஆசையே விட்ருச்சு
ஆனா யாரும் தரமாட்டேனு சொல்லிட்டாங்க. ஒரு பொண்ணு கிடைச்சுச்சு. எல்லாம் ஓகே ஆன பிறகு, அந்த பொண்ணோட மாமாவும் தர மாட்டேனு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் போகப்போக எனக்கு அந்த ஆசையே விட்ருச்சு. கல்யாண ஆசையே இல்லாம போயிடுச்சு.
எனக்கு சினிமா நண்பர்கள், என் கூட நடித்த நடிகர்கள் எல்லாம் பொண்ணு பாக்க முயற்சி பண்ணாங்க. எதுவுமே அமையல. அதுக்கு அப்புறம் எனக்கு கல்யாண ஆசையே விட்ருச்சு. கல்யாணம் பண்ணலனு நான் ஒருநாள் கூட வருத்தப்பட்டதே இல்ல" என்று தெரிவித்துள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
