தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம் - இந்த பிரபலம் தான் மாப்பிள்ளையா..?
நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜிஷா விஜயன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகையான ரஜிஷா விஜயன். தொடர்ந்து சூர்யாவின் ஜெய்பீம், கார்த்தியின் சர்தார் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ரஜிஷாவும், மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
திருமணம்
இதனையடுத்து, இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்நிலையில் ரஜிஷா - டோபின் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கான அறிவிப்பை ரஜிஷா - டாபின் ஜோடி விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
