அப்பாஸை அடிக்க பாய்ந்த நடிகர் - ஷூட்டிங்கில் நடந்தது என்ன?

Abbas Tamil Cinema Tamil Actors
By Karthikraja Dec 11, 2024 03:32 PM GMT
Report

படப்பிடிப்பின் போது அப்பாஸை அடிக்க சென்றது குறித்து நடிகர் பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.

ஆனந்தம்

மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா ஆகியோர் இணைந்து நடித்த படம் ஆனந்தம். குடும்பம் உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

anantham tamil movie

படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனால்கூட, இன்றும் டிவியில் ஒளிபரப்பும்போது அனைவரும் விரும்பி பார்க்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ஆகும். இது இயக்குநர் லிங்குசாமியின் முதல் படம் ஆகும். 

பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டியடித்த நடிகர் மோகன் பாபு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டியடித்த நடிகர் மோகன் பாபு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

பாவா லட்சுமணன்

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அந்த படத்தில் நடித்த நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

"ஆனந்தம் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நடந்தது. மெகா ஸ்டாரான மம்முட்டியே காலை 6:30 மணிக்கு நேரம் தவறாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். ஆனால் அப்பாஸ் மட்டும் 8 மணிக்கு மேல்தான் வருவார். அண்ணன் தம்பிகள் 4 பேரை வைத்துதான் இந்த படத்தின் கதையே நகரும். அதனால் 4 பேருமே இருந்தால்தான் சீன் எடுக்க முடியும். 

பாவா லட்சுமணன் அப்பாஸ்

வழக்கம் போல் அன்று அப்பாஸ் தாமதாக வர, 'ஏன் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க?' என்று கேட்டேன். அதற்கு அப்படித்தான் என்னால வர முடியும் என்று அப்பாஸ் சொன்னார். அதற்கு நான் அப்பாஸை அடிக்க பாய்ந்து விட்டேன். அதன் பிறகு அப்பாஸ் சரியான நேரத்திற்கு வந்தார்" என தெரிவித்துள்ளார்.