இதுக்கு தான் 3வது திருமணம் செய்தேன் - நடிகர் பாலா சொன்ன காரணம்!

Tamil Cinema Actors Bala Marriage
By Vidhya Senthil Oct 28, 2024 03:30 PM GMT
Report

  3வது திருமணம் செய்தது குறித்து நடிகர் பாலா பேட்டி அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 நடிகர் பாலா

தமிழ் சினிமாவில் அன்பு என்கிற படத்தின் மூலம் நடிகர் பாலா அறிமுகமானார். அதன் பிறகு காதல் கிசுகிசு ,அம்மா அப்பா செல்லம்',கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். புதிய முகம் ,சாகர் அலையஸ் ஜாக்கி ரீலோடட்,என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Actor Bala 3rd Marriage

சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ல் பாடகி அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். 2021ல் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் - விஜய் குறித்து நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை பதிவு!

எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் - விஜய் குறித்து நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை பதிவு!

இவருடனும் பிரச்சனை ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடந்த வாரம் காவல் நிலையத்தில் பாலா தன்னையும், தன்னுடைய மகளையும் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்ததன் அடிப்படையில் பாலா கைது செய்யப்பட்டு பின், ஜாமீனில் வெளியே வந்தார்.

  3வது திருமணம்

இதனையடுத்து தனது உறவுப் பெண்ணான சென்னையைச் சேர்ந்த கோகிலாவை பாலா, திருமணம் செய்துகொண்டார்.3வது திருமணம் செய்தது குறித்து நடிகர் பாலா பேட்டி அளித்துள்ளார். அதில் எங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது.

Actor Bala ex wife

விரைவில் குழந்தை பிறக்கும். நான் ஒரு ராஜாவைப்போல வாழ்வேன். அவள்தான் என் ராணி. திருமணத்திற்குப் பெண்கள் கிடைக்காதவர்கள் என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் அது அவர்களின் தவறு என்று தெரிவித்துள்ளார்.