3வது திருமணம் செய்த நடிகர் பாலா - பெண் யார் தெரியுமா?

Tamil Cinema Marriage Viral Photos
By Sumathi Oct 24, 2024 07:26 AM GMT
Report

நடிகர் பாலா 3வது திருமணம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் பாலா

தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. தொடர்ந்து அப்பா அம்மா செல்லம் என்ற படத்தில் நடித்தார். பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

actor bala with wife

2010ல் பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

3வது திருமணம்

இவருடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடந்த வாரம் காவல் நிலையத்தில் பாலா தன்னையும், தன்னுடைய மகளையும் தனமும் வழிமறித்து தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார்.

3வது திருமணம் செய்த நடிகர் பாலா - பெண் யார் தெரியுமா? | Actor Bala Married Again 3Rd Time

அதன் அடிப்படையில், பாலா கைது செய்யப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, தனது உறவுப் பெண்ணான சென்னையைச் சேர்ந்த கோகிலாவை பாலா, திருமணம் செய்துகொண்டார். கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கலூர் பாவக்குளம் கோயிலில் இத்திருமணம் காலை நடந்தது. இதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.