ஈழப்பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா: திடுக்கிடும் ஆதாரங்கள் அம்பலம்

girl actor evidence arya
By Jon Mar 10, 2021 11:34 AM GMT
Report

ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றி பணமோசடி செய்தார் என இலங்கை தமிழ்ப்பெண் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்கும்படி விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

 ஈழப்பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா: திடுக்கிடும் ஆதாரங்கள் அம்பலம் | Actor Arya Eelam Girl Startling Evidence Exposed

இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மிரட்டியதாக ஒரு சாட்டிங்கை பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார். முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செய்த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெண் வெளியிட்டுள்ளார்.

  ஈழப்பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா: திடுக்கிடும் ஆதாரங்கள் அம்பலம் | Actor Arya Eelam Girl Startling Evidence Exposed

அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய், உங்கள் ஊழியர்கள் பிச்சைக்காரன் என நினைக்கிறார்களோ இல்லையோ, நான் நினைக்கிறேன் என அந்த பெண் கேள்வி எழுப்ப தனக்கு நிறைய கடன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கேட்ட போதும் அப்பா எடுத்த முடிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நிறுத்தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.

  

Gallery