என்கிட்ட காசு இல்ல.. ப்ளீஸ் உதவி பண்ணுங்க - காருக்குள் இருந்து வீடியோ போட்ட பிக் பாஸ் அமீர்!
டான்ஸ் மாஸ்டர் அமீர் தன்னிடம் பணமில்லை உதவி செய்யுங்கள் என்று வீடியோ பதிவிட்டது தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் அமீர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அமீர். இவர் பிக் பாஸில் சீரியல் நடிகையான பாவனியை காதலித்து வந்தார். அதன்பிறகு பிக் பாஸ் ஜோசிகள் என்ற நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடினர்.
அதில் டைட்டில் வின்னர் ஆன இவர்கள் இருவரும் காதலிப்பதாக இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பின்னர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி இனைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
ஹெல்ப் கேட்ட அமீர்
இந்நிலையில், அமீர் தற்பொழுது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதல் அவர், கடந்த சில வருடங்களாக இரு மாணவர்களின் கல்வித் தொகையை வேறு ஒரு சோர்ஸ் மூலமாக கொடுத்து வந்ததாகவும் தற்போது அந்த சோர்ஸால் மாணவர்களின் கல்வி செலவை கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும்
தன்னாலும் அந்த அளவு பணத்தை கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் யாராவது அந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.