பிரேக்அப் குறித்து விளக்கம் அளித்த அமீர்-பாவனி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரேக்அப் குறித்த வதந்திகளுக்கு அமீர்-பவானி இருவரும் விளக்கம் அளித்த்துள்ளனர்.
அமீர்-பாவனி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் இந்த சீரியலுக்கு பிறகு பெரிதளவு அறியப்படாமல் இருந்தார். பின்னர், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதனால் பல ரசிகர்களை கவர்ந்தார். மேலும், இவர் அந்த ஷோவில் பங்கேற்ற டான்ஸ் மாஸ்டர் அமீருடன் பழகி வந்தார்.
இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்காமல் இருந்தனர். அதன்பிறகு, பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக அமீரோடு டான்ஸ் ஆடி அதில் டைட்டில் வெற்றி பெற்றதும் தன்னுடைய காதலை இணையத்தில் அனைவருக்கும் தெரிவித்திருந்தார்.
விளக்கம்
இதைத் தொடர்ந்து அண்மையில் இன்ஸ்ட்டாகிராமில் பேசிய பவானி தான் சிங்கிள் என்று கூற அமீரும் பவானியும் பிரேக்அப் செய்து விட்டதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது. இதனால் இவர்களின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இருவரும் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். அதில் 'தாங்கள் இருவரும் பிரேக்அப் செய்ததாக பரவி வரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது உறவு குறித்து வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாக அமீர்-
பாவனி இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.