புஷ்பா 2.. நடிகர் அல்லு அர்ஜூன் கைது - என்ன காரணம்?
நடிகர் அல்லு அர்ஜூன் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் திரண்டு வந்தனர்.
அந்த வகையில், புஷ்பா 2 படம் பார்க்க அதிகாலை ஷோவுக்கு வந்த அவரது தீவிர ரசிகை ஒருவர் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த ரசிகையின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் வழங்கினார் அல்லு அர்ஜுன்.
என்ன காரணம்?
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது சிக்காட்பள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த தியேட்டருக்கு எந்தவித முன் அறிவிப்புமின்றி நேரில் சென்றதால் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவித்தப்போது,
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக ரேவதி இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், இன்று ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து போலீசார் நடிகர் அல்லு அர்ஜூனை
கைது செய்து ரசிகையின் இறப்பு தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியிலும் ஆந்திராவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.