'கடவுளே அஜித்தே' அநாகரீமான கோசம் - நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை

Ajith Kumar Tamil Cinema Tamil Actors
By Karthikraja Dec 10, 2024 02:54 PM GMT
Report

கடவுளே அஜித்தே என கோசம் எழுப்ப வேண்டாம் என நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமா துறையை தாண்டி கார் ரேஸ், பைக் பயணம், ட்ரோன் தயாரிப்பு, புகைப்படம் எடுத்தல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர். 

பல ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித் குமார், தனது படத்தின் படம் தொடர்பான நிகழ்வுகளிளோ, வேறு எந்த பொது நிகழ்வுகளிலோ கலந்து கொள்ள மாட்டார். அப்படியும் அவரது ரசிகர் பட்டாளம் குறையவில்லை. அவரது படம் வெளியாகும் போது திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். 

உலக சாதனை புத்தகத்தில் அஜித்தின் நிறுவனம் - என்ன சாதனை தெரியுமா?

உலக சாதனை புத்தகத்தில் அஜித்தின் நிறுவனம் - என்ன சாதனை தெரியுமா?

கடவுளே அஜித்தே

நடிகர் அஜித் குமாரை அவரது ரசிகர்கள் 'தல' என அழைப்பார்கள். சமீபத்தில் தன்னை தல என அழைக்க வேண்டாம் என்றும், AK அல்லது அஜித் குமார் என அழைக்குமாறும் அறிவித்தார். சமீபத்தில் பல நிகழ்வுகளில் அவரது ரசிகர்கள் 'கடவுளே அஜித்தே' என கோசம் எழுப்பும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

actor ajith kumar

இந்நிலையில் அவ்வாறு கோசம் எழுப்புவதை தவிர்க்குமாறு நடிகர் அஜித் குமார்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துளியும் உடன்படவில்லை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க...அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.

எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட்ட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். 

kadavule ajithey கடவுளே அஜித்தே

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு" என தெரிவித்துள்ளார்.