கோர விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்; தலைகுப்புற கவிழ்ந்த கார் - வெளியான அதிர்ச்சி Video!
விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் மற்றும் ஆரவ் ஆகியோர் கார் விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மேலும், அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
விபத்து
இந்த காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடிகர் அஜித்தும், ஆரவ்வும் காரில் செல்வதுபோன்ற காட்சி படமாக்கும்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
இந்த காரை நடிகர் அஜித் ஒட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய உயிர் தப்பியுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vidaamuyarchi filming
— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது... புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
