அப்படி ஒரு பாசம்.. சென்னையில் குடியேறும் பாலிவுட் நடிகர் அமீர் கான் - என்ன காரணம்?
மாரடைப்பு ஏற்பட்ட தனது தாயாரின் சிகிச்சைக்காக சில மாதங்கள் சென்னையில் தங்க முடிவெடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் அமீர் கான்.
நடிகர் அமீர் கான்
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவில் இருந்து ஓய்வில் உள்ளார். தனது நடிப்பைத் தாண்டி குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருக்கிறார் அமீர்கான்.
கடந்த ஆண்டு அவரின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படுவதால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தங்க முடிவு
தனது தாயாரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், மருத்துவமனை அருகிலேயே ஹோட்டல் ஒன்றில் சில மாதங்கள் தங்க முடிவெடுத்துள்ளதாக அமீர்கான் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்து கொண்டு தாய் மற்றும் 3 குழந்தைகளான ஜூனைய்டு, இரா மற்றும் அசத் ஆகியோரை கவனித்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.