மாச மாசம் செக் பண்ணுவோம்..ஏமாத்தவே முடியாது!! மகளிர் உரிமை தொகை - அரசு அதிரடி அறிவிப்பு!!
செப்டம்பர் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை
திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பாக பார்க்கப்பட்டது மகளிர் உரிமை தொகை திட்டம். ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்திட்டம் பெருவாரியான மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், தகுதியான தங்களை முறையாக திட்டத்தில் சேர்க்கவில்லை என சில இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும் நம்மால் காண முடிகிறது.
அரசு அதிரடி அறிவிப்பு
இந்நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் இதில் தவறான தகவல்கள் இடம்பெற்றால் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.