தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை- சத்யபிரதா சாகு எச்சரிக்கை!

Lok Sabha Election 2024
By Swetha Apr 15, 2024 10:47 AM GMT
Report

மக்களவை தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தேர்தலன்று விடுமுறை

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தில் இருந்து களம் சற்று சூடு பிடித்துள்ளது.7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை- சத்யபிரதா சாகு எச்சரிக்கை! | Action On Companies Not Giving Holidays Election

இந்த நிலையில், வாக்குப்பதிவு அன்று கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்.

முக்கிய அறிவிப்பு; திரையரங்குகள் இயங்காது - உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

முக்கிய அறிவிப்பு; திரையரங்குகள் இயங்காது - உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

சத்யபிரதா சாகு எச்சரிக்கை

19-ம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால் 18-ந் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம்.

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை- சத்யபிரதா சாகு எச்சரிக்கை! | Action On Companies Not Giving Holidays Election

17-ம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் நாளை ஒருநாள் தபால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.