துரத்தி துரத்தி காதலித்த அர்ஜுன்..மறக்க முடியாதா ஒருதலை காதல் -யார் அந்த பிரபல நடிகை?
1988 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுன்
கன்னட திரையுலகில் 1981 ஆம் ஆண்டு, வெளியான சும்ஹாடா மரி சனியா, என்கிற படத்தில் அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் தமிழ் திரைத்துறையில் ராமநாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான 'நன்றி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தில், கார்த்திக், நளினி, மகாலட்சுமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடமை, இளமை, வேஷம், யார் அவன், எங்கள் குரல், என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.மேலும் தமிழ் ,கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.
இவர் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரை, ஆக்ஷன் கிங் அர்ஜுன் துரத்தி துரத்தி காதலித்த போதும் அந்த காதல் ஒருதலை காலதாக சோகத்தில் முடிந்ததாகச் செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் அந்த பிரபல நடிகை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நன்றி படத்தில் நடிக்கும் போதே நடிகர்அர்ஜுனுக்கு நடிகை நளினியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது . அது காதலாக மாறியது .இந்த படத்தில் நளினியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் நடித்திருப்பார். நடிகை நளினி அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.
ஒருதலை காதல்
இந்த சமயத்தில் நளினி நடிகர் ராமராஜனை காதலித்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மனதளவில் மனமுடைந்த அர்ஜூன், தன்னுடைய காதலை கடைசிவரை நளினியிடம் கூறாமல் மனதிலேயே புதைத்துக் கொண்டாராம் .
மேலும் பெற்றோரை எதிர்த்து நடிகை நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்ட போது இந்த செய்தி அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் அர்ஜுன், நளினியைக் காதலித்து அது ஒருதலை காதலாக மாறியது .
அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.