மாணவர்கள் கொடுமை: ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - டிஜிபி

Tamil nadu Crime
By Sumathi Nov 16, 2022 05:16 AM GMT
Report

 ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

 ராக்கிங்

வேலூர், தனியார் மருத்து கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக வளாகத்தில் ஓட வைத்து, ராக்கிங் செய்த சமபவம் இணையத்தில் வைரலாக பரவியது.

மாணவர்கள் கொடுமை: ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - டிஜிபி | Action Involved In Rocking Dgp Shailendra Babu

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ராக்கிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும் எனவும்,

 டிஜிபி உத்தரவு

ராகிங் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்பு குழு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.