செல்ஃபிக்கு சிரித்தது ஒரு குற்றமா? ஒலிம்பிக் பதக்கத்துடன் சென்ற வீரர்களுக்கு வந்த வினை!
எதிரி நாட்டு வீரர்களுடன் பதக்கம் வென்ற வீரர் சிரித்தப்படி செல்ஃபி எடுத்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் பதக்கம்
2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெற்றிக்கு பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதனிடையே போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
செல்ஃபி
இந்த சூழலில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். தற்போது வட கொரியா திரும்பியுள்ள அனைத்து வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறி எதிரி நாடான தென் கொரியா வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.