அந்த தேவைக்காக தான் அப்படிப்பட்ட படத்தில் நடிச்சேன் - ஓப்பனாக சொன்ன நடிகை!
பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன் என மலையாள நடிகை கனி குஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பிரியாணி
கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாவது உயரிய விருதான ‘கிரண்ட் பிரிக்ஸ்’ விருதை இந்திய திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ வென்றது. இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை இந்த படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா பெற்றார்.
இந்த படத்தில் நடித்த நடிகை கனி குஸ்ருதி முன்னதாக பிரியாணி திரைப்படத்திற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான கதைக்களம் என்று விமர்சிக்கப்பட்ட பிரியாணி படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கனி குஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பணம் இல்லை
அவர் கூறுகையில் " பிரியாணி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால், என்னிடம் பணம் இல்லை என இயக்குநரிடம் கூறியிருந்தேன். தனக்கு சுமார் 70,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன் .
அது எனக்குப் பெரிய தொகை. எனது கணக்கில் அப்போது ரூ.3,000 மட்டுமே இருந்தது. எனவே ரூ.70,000 கிடைத்தது நல்ல விஷயம் என நினைத்துக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.