சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் - பரபர சம்பவம்!
சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிட் வீச்சு
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் சிலர் சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த நபர் பெண் ஒருவர் மீது ஆசிட் பாட்டிலை வீசி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதில் பாட்டில் உடைந்து திராவகம் தெறித்ததில், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட சிலர் காயமடைந்தனர். உடனே, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் படுகாயம்
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று விட்டு ஜாமினில் வெளியே வந்த ராஜா என்ற நபர் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சாலையில் படுத்திருந்த பெண் ஒருவருக்கும் ராஜாவுக்கும் ஏற்கெனவே பகை இருந்துள்ளது. இதனால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.