மாடுகள் மீது கொடூரமாக ஆசிட் வீச்சு: தெருநாய்களுக்கு விஷம் - யார் அந்த கொடூர அரக்கர்கள்!
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் கால்நடைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
மதுரை மாநகர் பகுதிகளான புதூர், சூர்யா நகர், தல்லாகுளம், ஆனையூர் பகுதிகளில் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் பசு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகள் மீது மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றி அதைத் துன்புறுத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் காரணமாக மாடுகள் படுகாயமடைந்து சாலையில் ரத்த காயங்களுடனும் குடல் வெளியே தெரியும் நிலையிலும் சுற்றித் திரிகின்றன. இந்த காட்சிகள் பார்ப்பவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாகிறது.
இது மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் சாலையோரம் உள்ள தெரு நாய்களுக்கும் விஷம் வைத்துக் கொள்ளும் சம்பவமும் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் குறுணை மருந்து வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியோடு தீவிரமாக தேடி வருகின்றனர்.