அரும்பாக்கம் வங்கிக்கொள்ளை - சிக்கிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Chennai Tamil Nadu Police Crime
By Sumathi Aug 19, 2022 04:06 AM GMT
Report

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வங்கிக் கொள்ளை

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம் வங்கிக்கொள்ளை - சிக்கிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! | Acharapakkam Police Inspector Amalraj Suspended

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 காவல் ஆய்வாளர் பணிநீக்கம்

இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல், சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில்

அரும்பாக்கம் வங்கிக்கொள்ளை - சிக்கிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! | Acharapakkam Police Inspector Amalraj Suspended

கொள்ளையடிக்கப்பட்ட மொத்த 32 கிலோ தங்க நகையும் மீட்கப்பட்டது. இந்நிலையில், அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.