1 லிட்டர் பாலே பல ஆயிரம்; கோடி கோடியா சம்பாதிக்கலாமாம்.. கழுதை பால் பண்ணை பின்னணி!
கழுதை பால் பண்ணை மோசடி பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
கழுதை பால் பண்ணை
கழுதை பால் குடித்தால் உடம்பில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும், குரல் வளம் நன்றாக இருக்கும் என பலர் கூறுவதுண்டு. ஆனால் மருத்துவ ரீதியாக அது உண்மையா என்பது தெரியவில்லை.
இருப்பினும், கழுதை பால் விற்பனை களைகட்டி வருகிறது. ஒரு சிறிய சங்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பால் ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கும்பல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகளை ஏமாற்றி கோடி கணக்கில் பணம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள டாங்கி பேலஸ் பிரான்சைஸி என்ற நிறுவனம் ஒரு லிட்டர் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கிக் கொள்கிறோம்.
கும்பல் மோசடி
ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் என்று பால் கிடைத்தாலும் ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாயும் மாதத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். மேலும், ஒவ்வொருவரும் ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என கூறி, ஒரு பெண் கழுதையை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.
முதலில் மூன்று மாதங்களுக்கு கழுதை பாலை வாங்கி அதற்கு ஈடாக பணம் கொடுத்துள்ளனர். பின், 18 மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிறுவனத்தின் உரிமையாளர்களான பாபு, உலகநாதன்,
கிரி சுந்தர், பாலாஜி, ரமேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், விசாரித்ததில் தெலுங்கானா மட்டும் இன்றி இந்த கும்பல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.