தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்..!

By Thahir May 18, 2022 08:36 AM GMT
Report

தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை ஒன்றை அமைத்துள்ளார் பட்டாரி இளைஞர் ஒருவர்.

நெல்லை மாவட்டம்,முக்கூடல் பகுதிக்கு அருகில் துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் இந்த கழுதை பண்ணையை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்..! | Graduate Youth Who Started Donkey Farm Tamilnadu

இதை அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்,

தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்..! | Graduate Youth Who Started Donkey Farm Tamilnadu

அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம் உள்ளதாகவும், நாட்டில் தற்போது 1 லடசத்து 40 ஆயிரம் கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே உள்ளது.

கழுதை பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகவும், இந்த கழுதை பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுவதுடன், மனித எச்சில் உள்ள லைசைசைன் என்ற ரசாயனம் கழுதை பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.

தாய்ப்பாலுக்கு இணையான சக்தி கொண்ட இந்த கழுதை பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும்,

இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்றார்.