பாம்பு பிடிக்க ஒரு படிப்பு - விநோத பல்கலைக்கழகம்.. எங்கு இருக்கு தெரியுமா ?
பல்கலைக்கழகம் ஒன்று பாம்பு பிடிக்க ஒரு படிப்பையே நடத்தி வருகிறது.
படிப்பு
உலக நாடுகளில் ஓராண்டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000 வரை உள்ளது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிதுள்ளது.
இந்த நிலையில் அதிகரிக்கும் மரணங்களை கருத்தில் கொண்டு, கடந்த மே மாத இறுதியில், பாம்பு கடி இறப்புகளுக்கு கவனம் தேவை என்ற நோக்கத்தில் பல்கலைக்கழகம் ஒன்று பாம்பு பிடிக்க ஒரு படிப்பையே நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம் kingbrown செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் அதிக விஷம் கொண்ட பாம்புகளையும் லாவமாக பிடிக்க கற்றுத்தரப்படுகிறது. இது குறித்து பாம்பு பிடி பயிற்சியாளர் ஜானி கூறுகையில் அது மனிதர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்கிறார்.
விநோத பல்கலைக்கழகம்
மேலும் இதுவரை 30 மாணவர்கள் இந்தப் பயிற்சியை முடித்துஉள்ளனர். தற்பொழுது இந்த பயிற்சி நாடு முழுவதும் பயிற்சி விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி ஏற்கனவே உள்ள பாம்பு பிடி வீரர்களுக்கு போட்டி அல்ல என்று பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த புதுமையான பயிற்சி குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாம்பு பிடிப்பது என்பது பாரம்பரிய அனுபவமாக இருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் ஒரு துறை மூலம் பயிற்சி தேவையா என சிலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.