கோர விபத்து: திருவண்ணாமலை சென்று திரும்பியதில் 6 பேர் பலி!
லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோர விபத்து
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில்
6 பேர் பலி
அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த முதற்கட்ட விசாரணையில்,
உயிரிழந்தவர்கள் திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது.
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan