சேலம் அருகே கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ஆம்னி பஸ் - வேன் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆத்துார் புதுப்பேட்டை லீ பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் போதிய இட வசதி இல்லாததால் பலரும் வீட்டின் வெளிபுறத்தில் இருந்துள்ளனர்.
பின்னர் 11 பேர் நள்ளிரவு ஒரு வேனில் டீ குடிப்பதற்காக ஆத்துார் புறவழிச்சாலைக்கு சென்றனர். வேன் ஒட்டம்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர வித்தில் வேனில் பயணித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவர் முத்துசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil