மேட்டூர் அனல் மின் நிலைய கோரவிபத்து.. இருவர் பலி - உள்ளே சிக்கியது எவ்வளவு பேரோ?
மேட்டூர் அனல் மின் நிலையத்தி நிகழந்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கோரவிபத்து
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் 5 பேர் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.
அதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிக்கிய அந்த 2 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த நிலையில், நிலக்கரி டேங்க் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதை தொடர்ந்து, மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்போது தான் நிலக்கரி குவியலில் வெங்கடேசன், பழனிசாமி ஆகிய இரண்டு தொழிலாளர்களின் உடலும் மீட்கப்பட்டது.
இருவர் பலி
அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து வந்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனல் மின் நிலையம் முன்பு உள்ளே நுழைய முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போதைய நிலவரம்படி, அங்கு நிலக்கரி குவியலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் இந்த குவியலில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற கோணத்தில் மீட்பு பணிகள் நடக்கிறது.
ழுமையான மீட்புப்பணிகளுக்குப் பிறகே எத்தனை பேர் உள்ளே சிக்கி உள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என சொல்லப்படுகிறது. இந்த கோரவிபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.