நடுவானில் திடீரென செயலிழந்த ஏ.சி..மயங்கிய பயணிகள் - நடுவானில் பரபரப்பு..!

Uttarakhand
By Thahir Jun 25, 2022 10:53 PM GMT
Report

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏ.சி.திடீரென செயலிழந்ததால் பயணிகள் மயக்கமடைந்த சம்பவத்தால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தில் மயங்கிய பயணிகள்

உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து மும்பைக்கும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுள்ளது. அப்போது நடுவழியில் அந்த விமானத்தில் ஏசி வேலை செய்யாமல் போயுள்ளது.

நடுவானில் திடீரென செயலிழந்த ஏ.சி..மயங்கிய பயணிகள் - நடுவானில் பரபரப்பு..! | Ac Suddenly Paralyzed In The Middle

இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போதிய காற்று அங்கு இல்லாததால் சிலருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும் 3 பயணிகள் மயங்கி விழுந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "ஏசிகள் வேலை செய்யவில்லை என்றால் விமான நிறுவனங்கள் விமானத்தை இயக்கியிருக்கவே கூடாது. இது "ஒட்டுமொத்த அமைப்பின் அவமானம். விமானத்துல் ஒரு கேன்சர் நோயாளி பாதிக்கப்பட்டிருக்கிறார்." எனக் கூறியுள்ளார்.

பதில் அளித்த நிறுவனம்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

அதில் “ வணக்கம், எங்களைத் தொடர்புகொண்டதற்கு நன்றி, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

தயவுசெய்து உங்கள் PNR, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை பகிர்ந்துகொள்ளுங்கள். ” என குறிப்பிட்டுள்ளது.