எதனால் அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் ஏ.சி.சண்முகத்தின் தற்போதைய நிலை என்ன?
புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.சி.சண்முகம்
தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியான ஏ.சி.சண்முகம் நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் ஏ.சி.சண்முகத்திற்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தான் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது.அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
என்னதான் ஆச்சு
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.