இனி மின்சார ரயிலில் ஏசி; எப்போது வருது தெரியுமா? ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Chennai Railways
By Sumathi Dec 14, 2024 04:08 AM GMT
Report

ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி மின்சார ரயில்

தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் வந்து செல்கின்றனர்.

electric train

ஆவடி- சென்ட்ரல், கடற்கரை - வேளச்சேரி, கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிகை வைத்து வந்தனர்.

அதன்படி, ஏசி கோச்கள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. தற்போது இந்த பணி முடிவடைந்த நிலையில், வரும் ஜனவரி முதல் மின்சார ஏசி ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை - முக்கிய தகவல்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை - முக்கிய தகவல்

ரயில்வே அறிவிப்பு

12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை - செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் - ஆவடி, அரக்கோணம், கும்ம்டிப்பூண்டி ஆகிய ரூட்களில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் 10 கி.மீ வரை ரூ.29 கட்டணமாகவும்,

ac electric train chennai

11-15 கி.மீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி - கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது.

ஏனெனில் இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.