ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டிலேயே ஏசியில் போகலாம் - இதை நோட் பண்ணுங்க
ஆட்டோ அப்கிரடேஷன் வசதி ஒன்றை ரயில்வே மேம்படுத்தியுள்ளது.
ஆட்டோ அப்கிரடேஷன்
தினமும் ரயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது ரயில்வே வாரியம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி மட்டுமில்லாமல், 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அதேபோல் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய அம்சம்
இந்த வசதியை பயணிகள் பெற வேண்டும் என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது Consider for auto Upgradation- என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். இதை டிக் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறை ரயில் டிக்கெட் புக்கிங் சிஸ்டமில் ஆட்டோமெட்டிக்காக செயல்படும்.
எனவே, பயணிகள், இந்த வசதியை பெற வேண்டும் என்றால் ஆட்டோ அப்கிரேடேஷன் வசதியை செலக்ட் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் எந்த ஒரு ஆப்ஷனும் கிளிக் செய்யாமல் இருந்தால், நீங்கள் யெஸ் சொன்னதாக கருதி ஆட்டோ அப்கிரடேஷனுக்கு மாற்றப்படும்.
எனினும், அந்த ஆப்ஷனை கிளிக் செய்தவர்களுக்கே முதலில் முன்னுரிமை கிடைக்கும். இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளது.