வரலாறு காணாத வெப்ப அலை..உருகிய ஆபிரகாம் லிங்கன் சிலை - வைரலாகும் புகைப்படம்!
கடும் வெப்பம் காரணமாக ஆபிரகாம் லிங்கன் சிலை உருகியுள்ளது.
வெப்ப அலை
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல அமெரிக்காவிலும் கடுமையான வெப்ப அலை தொடர்கிறது.
அந்தவகையில் வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது.
ஆபிரகாம் லிங்கன்
இந்தச் சிலை உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் ஆறடி உயரமுள்ள இந்தச் சிலையின் தலை,
சுட்டெரித்த வெப்பத்தினால் உருகி, தொங்கத் தொடங்கியது. படிப்படியாக கால்கள் மற்றும் உடலும், நாற்காலியும் உருகியுள்ளன. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.