இந்தியா திரும்புமா கோஹினூர் வைரம்? கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி!
எலிசபெத் மகாராணியின் கிரீடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம் இந்தியா திரும்புமா என கேள்விகள் எழுந்துள்ளது.
கோஹினூர் வைரம்
கோஹினூர் என்பது வரலாற்றில் முக்கியமான 105.6 காரட் வைரமாகும். இந்த வைரமானது 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பல மன்னர்கள் கைகளில் மாறி, 1849 ஆம் ஆண்டில்,
பஞ்சாப்பை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை வெட்டி இங்கிலாந்தின் அரச மகுடத்தின் சிறப்பாக சேர்த்தனர். அப்போதிருந்து, இது ஆங்கிலேயர்களின் கிரீடத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்தியா திரும்புமா
கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு 6ம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்போது லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மன்னராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சார்லஸின் ராணி துணைவியான கமிலா பார்க்கர் சூடத் தயாராகிவிட்டார். இந்நிலையில், கோஹினூர் வைரம் சொந்த மண்ணுக்குத் திரும்ப இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என இந்திய நெட்டிசன்கள் சோகமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதை ஆங்கிலேயர்கள் திலீப் சிங்கிடம் இருந்து வலுக்கட்டாயமாகவோ.திருடியோ செல்லவில்லை என்பதால் அதை கேட்பது சரியாக இருக்காது என்பதே உண்மை.