எலிசபெத் ராணி அணிந்திருந்த கோஹினூர் வைர கிரீடம் அடுத்து யாருக்கு தெரியுமா ?

Queen Elizabeth II England
By Irumporai Sep 09, 2022 05:06 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் புதிய ராணியான கமிலாவிடம் சென்றுள்ளது.

எலிசபெத் உயிரிழந்தார்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். 96 வயதான அவர் பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சை இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கமிலாவுக்கு செல்லும் கிரீடம்

இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். அத்துடன் அவரது மனைவி கமிலா ராணியானார். இதன் மூலம் விலை உயர்ந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமலாவசம் சென்றுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் உள்ளது .

இதை கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அவர் மறைவை ஒட்டி கமிலா வசம் செல்கிறது.