மொழிப்பிரச்சனை; பெண்ணிற்கு கருக்கலைப்பு - மருத்துவர்கள் செய்த காரியம்!
மொழி புரியாமல் மருத்துவர்கள் பரிசோதனைகாக வந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொழிப்பிரச்சனை
செக் குடியரசின் பிராக் நகரில் அமைந்துள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த மருத்துவர்களிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார்.
ஆனால், அவர் பேசிய மொழியை புறிந்து கொள்ளாத ஊழியர்கள், அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என்று தவறாக எண்ணி வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அந்த வார்டில் இருந்த ஊழியர்கள் சரியாக விசாரிக்காமல் ஆரோக்கியமாக இருந்த அந்த பெண்ணின் கருவை கலைத்துள்ளனர்.
நேர்ந்த விபரீதம்
கடந்த மாதம் இந்த சம்பம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் என அனைவரும் அந்த பெண்ணை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டனர்.
மேலும், இந்த தவறு நடந்ததிற்கு மொழித் தடையுடன் அலட்சியமும் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் பனி நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.