ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? ஒருவழியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்!

Aishwarya Rai Divorce Abhishek Bachchan
By Sumathi Aug 12, 2024 02:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து குறித்த செய்திக்கு அபிஷேக் பச்சன் விளக்கமளித்துள்ளார்.

விவாகரத்து வதந்தி

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

aishwarya rai - abishek bachchan

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!


அபிஷேக் பச்சன் விளக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? ஒருவழியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்! | Abishek Bachchan About Divorce With Aishwarya Rai

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அபிஷேக் பச்சன், "எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்.

அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.