ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவிற்கு காரணம் இந்த பாலிவுட் நடிகையா? போட்டுடைத்த பிரபலம்
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
பாலிவுட் டாப் நட்சத்திர ஜோடிகளின் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமணத்திலும் இருவருமே, தனித்தனியாகவே இருந்தார்கள். மகள் தாய் ஐஸ்வர்யா ராயுடன் இருந்த நிலையில், அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடன் இருந்தார்.
இதனை வைத்து மீண்டும், இவர்களின் விவாகரத்து தொடர்பான கருத்துக்கள் வேகமெடுத்துள்ளன. இவர்களின் விவாகரத்து தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்றார்.
இந்த நடிகையே...
தொடர்ந்து பேசியவர், அபிஷேக் பச்சனுக்கு மற்றொரு நடிகையுடன் பழக்கம் இருப்பதும் இவர்களது பிரிவிற்கு காரணம் என்றும் பேசினார். இவரை தொடர்ந்து பேசிய மற்றொரு விமர்சகர் சபிதா ஜோசப், பாலிவுட் நடிகை ரேகா ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்பும் இவர்கள்து பிரச்சைக்கு காரணம் என்கிறார்.
ரேகா - அமிதாப் பச்சன் காதல் விவகாரத்தால் ரேகாவிற்கும் ஜெயா பச்சன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்த சூழலில் தான், ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நட்பு கொண்டிருப்பதே குடும்பத்தில் விரிசல்களை உண்டாக காரணமாக அமைந்ததாக சபிதா ஜோசப் தெரிவித்தார். இவ்வாறு தகவல்கள் வெளிவரும் சூழலிலும், ஐஸ்வர்யா ராய் அதனை முழுவதுமாக மறுத்து இருப்பதாகவும் சபிதா ஜோசபே பேசியுள்ளார்.